சுவையான அவுல் லட்டு இப்படி வீட்டிலே செய்து பாருங்க! யாரும் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க!

Summary: வீட்டில் சொந்தக்காரர்கள், அல்லது விஷேஷம் போன்று வைத்திருக்கும் போது என்ன ஸ்வீட் செய்யலாம் என்று குழப்பமாக உள்ளதா? அப்போ சட்டுனு அவல் லட்டு செய்து கொடுத்து பாருங்க எல்லா லட்டும் காலியாகிவிடும். ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.இந்த அவல் லட்டு எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • நெய்
  • 200 கிராம் அவல்
  • 1 மூடி தேங்காய்
  • முந்திரி
  • வெல்லம்
  • ஏலக்காய் பொடி

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் ஒரு வாணலில் நெய் 2 ஸ்பூன் விட்டு அவலை நன்கு வறுத்துக்கொள்ளவும். வறுத்து அதனை தனியாக ஒரு தட்டில் எடுத்துவைத்துக்கொள்ளவும்
  2. அடுத்து அதே வாணலில் துருவிய தேங்காய் சேர்த்து கொஞ்சம் நிறம் மாற வறுத்து அதனையும் தட்டில் எடுத்து ஆறவிடவும்.
  3. பிறகு அதே வாணலில் 2 ஸ்பூன் நெய் விட்டு முந்திரிப்பருப்புகளை நன்கு வறுத்துக்கொள்ளவும். தனியாக எடுத்துவைக்கவும்.
  4. அடுத்து வறுத்துவைத்துள அவல் மற்றும் தேங்காய் துருவலை மிக்சியில் சேர்த்து ரவை பத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
  5. பிறகு ஒரு வாணலில் நுணுகிய வெல்லம் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு வெல்லம் கரைந்ததும் அதில் ஏலக்காய் பொடி சேர்த்து அரைத்து வைத்துள்ள அவல் , தேங்காயை சேர்த்து நன்கு கிளறவும்.
  6. அடுத்து அதில் வறுத்துவைத்த முந்திரி பருப்பை சேர்த்து சூடாக இருக்கும் போதே லட்டு போல் புடித்துக்கொள்ளவும்.