ருசியான காடை முட்டை வறுவல் இனி இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் சுவையே தனி!

Summary: காடை முட்டை வறுவல் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த காடை முட்டை வறுவல் செய்து சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 10 காடைமுட்டை
  • 2 ஸ்பூன் நல்எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • ½ டீஸ்பூன் சீரகம்
  • கருவேப்பிலை
  • 10 சின்ன வெங்காயம்
  • ½ பழம் தக்காளி
  • மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா
  • உப்பு
  • ஸ்பூன் மிளகு தூள்
  • கொத்த மல்லி இலை

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் உப்பு சேர்த்து காடை முட்டைகளை போட்டு 15 நிமிடம் வேகவிடவும்.
  2. வெந்ததும் முட்டையின் தோல் உரித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. பிறகு ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கந்ததும் கடுகு, சீரகம்,கருவேப்பிலை,சேர்த்து பொரிய விடவும்.
  4. அடுத்து அதில் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போக மோடி போட்டு வேக விடவும்.
  6. தக்காளி, வெங்காயம் சுண்டியதும் வேக வைத்த காடை முட்டைகளை சேர்த்து பிரட்டி அதில் மிளகு தூள், மற்றும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.