ருசியான பசலை கீரை பன்னீர் கிரேவி இப்படி செய்து பாருங்க! அசத்தலான சுவையில் இருக்கும்!

Summary: குழந்தைகள் கீரை சாப்பிட அடம் பிடிக்கிறார்களா? அப்படியெனில் அவர்களுக்கு கீரையை வித்தியாசமான முறையில் சமைத்துக் கொடுங்கள். குறிப்பாக இரவில் சப்பாத்தி செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக பாலக் பன்னீர் செய்து கொடுங்கள். இது உங்கள் குழந்தை விரும்பி சாப்பிடும் வகையில் இருப்பதோடு, அலுவலகம் முடிந்து களைப்புடன் வீட்டிற்கு வரும் உங்கள் துணைக்கும் நல்ல விருந்து கொடுத்தது போன்று இருக்கும். இந்த பாலக் பனீர் ரொட்டி / சப்பாத்தி மற்றும் புலாவுக்கு கூட சிறந்த கலவையாகும். பன்னீர் பட்டர் மசாலா மற்றும் கடாய் பனீர் ஆகியவற்றுடன் இது மிகவும் பிரபலமான பன்னீர் வகைகளில் ஒன்றாகும். நம்மில் பெரும்பாலோர் பனீரை விரும்புகிறோம், குறிப்பாக குழந்தைகள்.

Ingredients:

  • 200 கிராம் பன்னீர்
  • 1 கட்டு கீரைபசலைக்கீரை
  • 1 பச்சை மிளகாய்
  • 1 பெரிய
  • 2 தக்காளி
  • 6 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 2 டீஸ்பூன் வெண்ணெய்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா
  • 1 டீஸ்பூன் வர மல்லித்தூள்
  • 1 டீஸ்பூன் கசூரிமேத்தி
  • 1/2 டீஸ்பூன் சர்க்கரை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Steps:

  1. பசலை கீரை ஒரு கட்டு எடுத்து ஆய்ந்து கொள்ளவும்.
  2. அதனை நீரில் அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. கீரை முழுகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  4. கொதிக்கும் தண்ணீரில் கீரையை ஒரு மூன்று நிமிடம் வேகவைத்து வடித்து கொள்ளவும் கீரை தண்ணீரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  5. ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து அது உருகிய உடன் ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
  6. பிறகு அதில் பச்சை மிளகாய், வெங்காயம் இஞ்சி,பூண்டு, சேர்த்து நன்கு சிவக்க வதக்கிக்கொள்ளவும்.
  7. பிறகு தக்காளியை சேர்த்து நன்கு சுருள வதக்கி கொள்ளவும். தனியாக எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
  8. ஆற வைத்த தக்காளி கலவை, ஆற வைத்த கீரை இவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  9. 150 கிராம் பன்னீர் எடுத்து தங்களுக்கு வேண்டிய சைஸில் வெட்டிக் கொள்ளவும்.
  10. மஞ்சள் தூள் சீரகத்தூள், வரக்கொத்தமல்லித்தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள் இவற்றை ஒரு டீஸ்பூன் வெண்ணெய் உருக வைத்து அதில் சேர்த்து பச்சை வாசம் போக வதக்கிக் கொள்ளவும்.
  11. பிறகு அரைத்து வைத்த கீரை விழுதை எடுத்து இதில் சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு வதக்கிக் கொள்ளவும். டீஸ்பூன் தூள் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  12. தேவையான அளவு வடித்த வைத்த கீரை தண்ணீரை ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விடவும் மிதமான தீயில்.
  13. பிறகு வெட்டி வைத்த பன்னீர் துண்டுகளை அதில் சேர்த்து நன்கு கலந்து விட்டு அதையும் ஐந்து நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
  14. பால் ஏடை அல்லது மில்க் க்ரீம் இருந்தால் இதில் சேர்த்துக் கொள்ளலாம். கடைசியாக ஒரு டீஸ்பூன் கஸ்தூரி மேத்தியை கைகளால் கசக்கி சேர்த்துக் கொள்ளவும்.
  15. அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும். சுவையான சத்தான பாலக் பனீர் அதாவது பசலை கீரை பனீர் குருமா ரெடி.
  16. சப்பாத்தி,நான்,ரொட்டி, குளிச்சா போன்ற கோதுமை உணவுகளுக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.