காரசாரமான ருசியான இறால் பிரட்டல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: நீங்கள் அசைவ பிரியரா? உங்களுக்கு இறால் ரொம்ப பிடிக்குமா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. இந்த வார கடைசில் என்ன நான் வெஜ் சமைக்கலாம் என்று குழப்பமாக உள்ளதா? அப்போ இது போன்று இறால் பிரட்டல் செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். அதுமட்டும் அல்லாமல் சாதமும் காலியாகிவிடும், இறாலும் காலியாகிவிடும். ஏனென்றால் அதன் சுவையே தனி தான்.

Ingredients:

  • ½ கிலோ இறால்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் கறிமசாலா தூள்
  • 2 ஸ்பூன் மல்லி தூள்
  • 1 ஸ்பூன் மிளகு தூள்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 1 வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி தலை

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் இறாலில் உள்ள குடல் பகுதியை நீக்கி சுத்தம் செய்து கழுவி வைத்துக்கொள்ளவும்.
  2. பிறகு சுத்தம் செய்த இறாலை ஒரு பௌலில் போட்டு அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கறிமசாலா தூள், மல்லி தூள், மிளகு தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பிரட்டி வைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றாமல் பிரட்டி வைத்த இறாலை போட்டு சிறிது நேரம் அப்படியே வேக விடவும்.
  4. வெந்ததும் மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. வெங்காயம் நிறம் மாறியதும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு மசாலாவில் பிரட்டி வேக வைத்த இறாலை சேர்த்து நன்கு பிரட்டி அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து பரிமாறவும்.