காலை டிபனுக்கு சுவையான பப்பாளி கேசரி இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி தான்!

Summary: இனிப்பாக ஏதாவதும் சாப்பிடணும் போல இருக்க? அப்போ இது போன்று பப்பாளி கேசரி செய்து சாப்பிட்டு பாருங்க வாயில் வைத்த உடனே கரைந்து போகும். அதுமட்டும் அல்லாமல் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த கேசரி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.

Ingredients:

  • 1 கப் பப்பாளி துண்டுகள்
  • 1 கப் ரவை
  • 1 கப் சர்க்கரை
  • ¼ லிட்டர் பால்
  • நெய்
  • முந்திரி
  • 2 ஏலக்காய்

Equipemnts:

  • மிக்ஸி

Steps:

  1. முதலில் பப்பாளி துண்டுகளை மிக்சியில் சேர்த்து அத்துடன் பால் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி பருப்புகளை வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  3. பிறகு அதே கடாயில் ரவை சேர்த்து வறுத்து தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.
  4. அதன் பிறகு அதே கடாயில் ஒரு கப் ரவைக்கு 2 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கலர் பொடி சிறிதளவு சேர்த்து கொதிக்க விடவும்.
  5. தண்ணீர் கொதித்ததும் ரவையை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கட்டிகள் இல்லாமல் கிளறிவிடவும். அத்துடன் பொடித்த ஏலக்காய் சேர்த்துக்கொள்ளவும்.
  6. பின்னர் பாத்திரத்தை மூடி போட்டு வேகவிடவும். ரவை வெந்ததும் சர்க்கரை மற்றும் அரைத்து வைத்துள்ள பப்பாளி விழுதை சேர்த்து கிளரவம்.
  7. எல்லாம் ஒன்றுசேர்ந்து கெட்டியாக வரும் பொழுது நெய் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி சேர்த்து இறக்கவும்.