கோடை வெயிலக்கு இதமாக வீட்டிலேயே குளு குளு தேன் ஐஸ்கிரீம் இப்படி செய்து பாருங்க!!!

Summary: என்னதான் உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை நாம் பார்த்துப்பார்த்து சமைத்து கொடுத்தாலும் குழந்தைகள் எப்போதும் அதிகமாக விரும்புவது ஐஸ்கிரீம் வகைகளைத்தான். எப்பொழுதும் செய்யும் உணவுப் பொருட்களை விட மிகவும் எளிமையான முறையில் இந்த தேன் ஐஸ்கிரீம் செய்துவிடலாம். இவ்வாறு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தேன் ஐஸ்கிரீம் எவ்வாறு  வீட்டிலேயே செய்திடலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Ingredients:

  • 5 முட்டை வெள்ளைக்கரு
  • 1/2 லிட்டர் பால்
  • 1/4 லிட்டர் கிரீம்
  • 1 1/2 கப் தேன்
  • 1 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 ஐஸ்கிரீம் கோப்பை

Steps:

  1. முட்டையையும்தேனையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அடித்துக்கொள்ளவும். பாலை ஒரு பாத்திரத்தில் அது கொதிநிலை வரும் வரை சூடாக்கவும்.
  2. அதன்பின்னர் மெதுவான தீயாகக் குறைத்து விடவும்.  இதில்பால் தேன் கலவையைக் கொட்டி கெட்டியாகும் வரை கலக்கவும்.
  3. இதனைதீயிலிருந்து எடுத்து வடிகட்டி குளிரவைக்கவும். இதில் கிரீமை சேர்த்து கலந்து வெண்ணிலா எஸ்ஸென்ஸ் கலந்து இதனை ஐஸ்கிரீம் கோப்பைகளில் ஊற்றி இரவு முழுவதும் உறையும் குளிர்பதன பெட்டியில் உறைய வைக்கவும். அடுத்த நாள் எடுத்து உண்ணலாம்.