வாழைஇலை சிக்கன் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க! ஆஹா இதன் ருசியே தனி தான்!

Summary: நீங்கள் அசைவ பிரியர்களா? உங்களுக்கு சிக்கன் ரொம்ப பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. வாழை இலை சிக்கன் இப்படி ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கு. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் இந்த சிக்கனில் எண்ணெய் சேர்க்காமல் வேக வைத்து செய்யப்படுவதாகும். அதனால் இன்னும் ருசியாக இருக்கும். வீட்டிலே சுலபமாக செய்து விடலாம். இந்த சிக்கனை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 3 டேபிள் ஸ்பூன் மல்லி
  • 8 வர மிளகாய்
  • 4 பட்டை
  • 4 இலவங்கம்
  • 2 அண்ணாச்சி மொக்கு
  • 2 மராட்டி மொக்கு
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 50 கிராம் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 3 ஸ்பூன் தயிர்
  • 4 வாழை இலை
  • 1 கிலோ சிக்கன்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்துக்கொள்ளவும்.
  2. முதலில் ஒரு வாணலில் மல்லி மற்றும் வர மிளகாய் சேர்த்து நன்கு வறுத்து தனியாக ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.
  3. அடுத்து அதே வாணலில் பட்டை, இலவங்கம், அண்ணாச்சி மொக்கு, மராட்டி மொக்கு, சோம்பு, சீரகம், மிளகு அனைத்தை சேர்த்து நன்கு வறுத்து அதனையும் அதே தட்டில் கொட்டி ஆறவிடவும்.
  4. ஆறியதும் அவற்றை மிக்சியில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
  5. அடுத்து அரைத்ததை ஒரு பௌலில் கொட்டி அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், தயிர், எலுமிச்சை சாறு, சேர்த்து தண்ணீர் தெளித்து நன்கு கலந்துகொள்ளவும்.
  6. அடுத்து சுத்தம் செய்துள்ள சிக்கனில் கால்கள் இருந்தால் அதில் கத்தியால் கீறி விடவும். பிறகு கலந்து வைத்துள்ள மசாலாவில் பிரட்டி 2 அல்லது 3 மணி நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்.
  7. பிறகு அதனை 4 துண்டுகளாக எடுத்து வாழை இலையில் வைத்து கட்டி இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொஞ்சம் ஊற்றி கொதித்ததும் கட்டி வைத்த வாழை இலையை வேகவிடவும்.
  8. 15 நிமிடம் கழித்து எடுத்து சாப்பிடவும்.