காரசாரமான முட்டை சுக்கா செய்வது எப்படி ?

Summary: முட்டை சாப்பிடுவதில் பெரும்பாலும் அவித்த முட்டையை யாரும் விரும்ப மாட்டார்கள். அதற்கு மாறாக ஆம்லெட், ஆப்ஆயில், கலக்கி என்று முட்டையை பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவுகளை தான் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் அவித்த முட்டையை வைத்து நாம் இன்று ஒரு உணவு தயார் செய்ய போகிறோம். இன்று அவித்த முட்டையை வைத்து முட்டை சுக்கா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 8 முட்டை
  • 4 tbsp எண்ணெய்
  • 1 துண்டு பட்டை
  • ¼ tbsp சோம்பு
  • 3 பச்சை மிளகாய்
  • கருவேப்பிலை
  • 8 tbsp சின்ன வெக்காயம்
  • 1 tbsp கரம் மசாலா
  • 1 tbsp கறி மசாலா
  • 1 tbsp மிளகாய்த்தூள்
  • 2 tbsp மிளகு
  • 2 tbsp சீரகம்

Equipemnts:

  • 2 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி நாம் எடுத்து வைத்துள்ள முட்டைகளை அதில் போட்டு சிறிது கல் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  2. முட்டை கொதிநீரில் நன்றாக வெந்ததும் முட்டையை தனியாக எடுத்து. முட்டை ஓட்டை உடைத்து மஞ்சள் கரு உடையாமல் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள் பின்பு முட்டையின் வெள்ளை கருவை சிறு சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
  3. பின்பு வேறொரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள் பின்பு என்னை சூடேறியதும் பட்டை, சோம்பு சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
  4. அதன் பின் கருவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும் வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.
  5. பின்பு வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் கரம் மசாலா, மிளகாய் தூள், கறி மசாலா மற்றும் ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு சீரகம் சேர்த்து அரைத்துக் கொண்டு அந்த பொடியையும் அதனுடன் சேர்த்து போட்டு நன்கு வதக்கி எடுக்கவும்.
  6. பின்பு மசாலா நன்றாக வதங்கியதும் அதனுடன் நாம் வெட்டி வைத்திருக்கும் முட்டையின் வெள்ளை கருவளையம் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்கவும்.
  7. கடைசியாக மஞ்சள் கருவை சேர்த்து மஞ்சள் கரு உடையாமல் கிளறி விடவும் பின்பு சிறிது கொத்தமல்லியை தூவி கடாய் இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் முட்டை சுக்கா இனிதே தயாராகிவிட்டது.