ருசியான வெஜ் கடாய் மதிய உணவுக்கு இப்படி செய்து பாருங்க! அசத்தலான சுவையில் இருக்கும்!

Summary: வெஜிடபிள் கடாய் என்பது உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்திய உணவகங்களிலும் காணப்படும் ஒரு பிரபலமான சைவ உணவாகும். மசாலா குழம்புகளில் மொறுமொறுப்பான காய்கறிகளின் இந்த வண்ணமயமான கலவையானது ஒரு பசியைத் தூண்டும் தோற்றத்தை மட்டுமல்ல, ஒரு சுவையான சுவையையும் கொண்டுள்ளது.இந்த செய்முறை வட இந்திய சமையலில் இருந்து உருவானது மற்றும் முழு உணவும் கடாயில் செய்யப்படுகிறது. கடாயில் செய்யப்படும் மிகவும் பிரபலமான சைவ சமையல் வகைகள் கடாய் பனீர் மற்றும் கடாய் காளான் ஆகும்.

Ingredients:

  • 200 கிராம் நறுக்கிய காளான்
  • 100 கிராம் நறுக்கிய கேரட்
  • 150 கிராம் பச்சைப்பட்டாணி
  • 150 கிராம் நறுக்கிய உருளைக்கிழங்கு
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 150 கிராம் நறுக்கிய பெரிய வெங்காயம்
  • 150 கிராம் தக்காளி அரைத்தது
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கரம்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/2 டீஸ்பூன் மல்லித்தூள்
  • 1 டீஸ்பூன் கசூரிமேத்தி
  • கொத்தமல்லி இலை
  • 150 கிராம் பெரிய
  • 100 கிராம் தக்காளி
  • 1 குடமிளகாய்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1 டீஸ்பூன் தனியாத்தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • உப்பு
  • 10 முந்திரி
  • கொத்தமல்லி இலை
  • 2 டீஸ்பூன் வெண்ணெய்

Equipemnts:

  • 1 கரண்டி
  • 1 கடாய்
  • 1 குக்கர்
  • 1 பவுள்

Steps:

  1. ஒரு வாணலியில் எண்ணை மற்றும் நெய் விட்டு காய விடவும். பின்பு எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும்.
  2. இதில் இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு , உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து 1நிமிடம் வதக்கவும்.
  3. பின்னர் தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
  4. பின் இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி சிம்மில் 5 நிமிடம் வேக வைக்கவும்.
  5. பின் முந்திரி விழுது, கசூரிமேத்தி, கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து இறக்கவும்.
  6. அதே நேரத்தில் ஒரு குக்கரில் காய்களை போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து 1 விசில் விட்டு இறக்கவும். வடிகட்டி வைக்கவும்.
  7. ஒரு இரும்பு வாணலியில் வெண்ணெய் சேர்த்து சூடானதும், முந்திரி, நறு‌க்கிய வெங்காயம், குடைமிளகாய்,சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  8. இதில் மசாலாப் பொருட்களை சேர்த்து வதக்கவும். இதில் வடிகட்டி வைத்த காய்களை சேர்த்து வதக்கி க்ரேவியில்போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.
  9. கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். சப்பாத்தி, நான், புல்கா, பரோட்டா போன்றவற்றிற்கு மிகவும் அருமையாக இருக்கும்.