காலை உணவுக்கு ருசியான முடக்கத்தான் கீரை தோசை இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: எப்பொழுது காலையிலும், இரவிலும் ஒரே மாதிரி இட்லி, தோசை என்று செய்து தராமல் இது போன்று முடக்கத்தான் கீரை தோசை செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் முடக்கத்தான் கீரையில் நிறைய சத்துக்கள் இருப்பதால் குழந்தைகளுக்கு வாரத்தில் ஒரு முறை இது போன்று உணவில் சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியமாக இருக்கும்.இந்த தோசை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீகேலும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 4 பல் பூண்டு
  • 10 சின்ன வெங்காயம்
  • முடக்கத்தான் கீரை
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 2 கப் தோசை மாவு

Equipemnts:

  • தோசை கல்

Steps:

  1. முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சின்ன வெங்காயம், பூண்டு, சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. அடுத்து சுத்தம் செய்துள்ள முடக்கத்தான் கீரையை சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் சீரகம், மிளகு சேர்த்து வதக்கவும்.
  3. நன்கு வதங்கியதும் ஆறவிட்டு மிக்சியில் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  4. பிறகு அரைத்ததை தோசை மாவில் கலந்து தோசை, அல்லது இட்லியாகவும் சுட்டு சாப்பிடலாம்.