ருசியான சக்கரை வள்ளிக்கிழங்கு, பாகற்காய் கிரேவி இப்படி செய்து பாருங்க!

Summary: பாகற்காயில் இருக்கும் கசப்பு தன்மை காரணமாக இந்த பாகற்காயின் பெயரை கேட்டாலே ஒரு சிலர் முகம் சுழிப்பதுண்டு. பாகற்காய், இரைப்பையில் உள்ள பூச்சிகளை கொல்லும், பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதோட பழம் மற்றும் இலைகள்லயும் கூட நிறைய மருத்துவ குணம் இருக்கு. இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் பாகற்காய் குழம்பு, ஒரு ருசியான மற்றும் எளிமையான தென்னிந்திய கறியை நீங்கள் ஒரு வார நாள் உணவாக வேகவைத்த சாதம், மற்றும் இலை வடகம் ஆகியவற்றுடன் பரிமாறலாம். இப்படி செய்வதால் பாகற்காயின் கசப்பு தன்மை தெரியாது. அதனால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 1/4 கிலோ பாகற்காய்
  • 1/4 கிலோ சக்கரவள்ளிக் கிழங்கு
  • 2 நறுக்கிய பெரிய வெங்காயம்
  • 1 கப் தக்காளி பேஸ்ட்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  • 1 வெல்லம்
  • ஙபுளிக்கரைசல்
  • 1 டீஸ்பூன் தனியாத்தூள்
  • 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் சீசீரகம்
  • கொத்தமல்லி இலை
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 கரண்டி

Steps:

  1. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பாகற்காய், சக்கரவள்ளிக் கிழங்கினை பொரித்து எடுத்து வைக்கவும்.
  2. அதே வாணலியில் சீரகம் சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து சிவக்க நன்கு வதக்கவும்.
  3. இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  4. இதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் உப்பு சேர்த்து 1நிமிடம் வதக்கவும்.
  5. இதில் தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து மூடி 2 நிமிடம் வேகவிடவும்.
  6. பின்னர் மூடியைத் திறந்து பொரித்து வைத்துள்ள பாகற்காய், சக்கரவள்ளிக் கிழங்கு சேர்த்து புளிக்கரைசல், வெல்லம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  7. எண்ணெய் பிரியும் வரை வேகவிடவும். பின்னர் கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து இறக்கவும்.
  8. பாகற்காயின் கசப்புத்தன்மை தெரியவே தெரியாது.
  9. இதன் சுவையே வித்தியாசமானதாக சுவையிலஅசத்தலாக இருக்கும். சப்பாத்தி, சாதம் போன்றவற்றிற்கு மிகவும் ஏற்றது.