வெயிலுக்கு இதமான புத்துணர்ச்சியூட்டும் வெள்ளரிக்காய் புதினா ஜூஸ் இப்படி செய்து பாருங்க!

Summary: வெள்ளரிக்காய் சாறு ஒரு சிறந்த புத்துணர்ச்சியூட்டும் பானமாகும், அதை நீங்கள் ஆண்டின் எந்த நேரத்திலும் செய்யலாம். வெள்ளரிகளில் அதிக நீர்ச்சத்து இருப்பதால், இந்த ஜூஸ் வெப்பமான கோடை நாளுக்கு ஏற்றது. வெள்ளரிக்காயுடன் புதினா சேர்ப்பதால் நல்ல நறுமணத்துடன் கூடிய  பானமாக இருக்கும் இந்த எளிதான வெள்ளரிக்காய் சாறு செய்முறையானது நீங்கள் நீர் சத்து குறைவாக  இருக்கும் போதெல்லாம் நீரேற்றம் செய்வதற்கான சிறந்த வழியாகும்.

Ingredients:

  • 1 வெள்ளரிக்காய்
  • 1 எலுமிச்சங்காய்
  • 2 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி
  • 5 எலுமிச்சை
  • 2.5 லிட்டர் தண்ணீர்
  • 15 புதினா

Equipemnts:

  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில்வெள்ளரிக்காய், 1 எலுமிச்சங்காய் மற்றும் 2 எலுமிச்சையை வட்ட வட்டமாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
  2. பின்னர்மீதமுள்ள 3 எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து, அதில் புதினாவை நறுக்கி போட்டு, அதில் 1.5 லிட்டர் நீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்
  3. பின்புஅதில் இஞ்சி மற்றும் மீதமுள்ள தண்ணீரை ஊற்றி, அத்துடன் வெள்ளரிக்காய், எலுமிச்சங்காய் மற்றும் எலுமிச்சையை போட்டு நன்கு கிளறி, 24 மணிநேரம் ஊற வைத்து,
  4. பின்குடிக்க வேண்டும்.இப்படி 3 நாட்கள் தொடர்ந்து செய்து குடித்து வந்தால், தொப்பை குறைவதைக் காணலாம்.