தித்திக்கும் சுவையில் கடலை பருப்பு பாயசம் இப்படி செய்து பாருங்க! அசத்தலான சுவையில்!

Summary: மாலை வேலையில் குழந்தைகளுக்கு என்ன ஸ்வீட் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ இந்த கடலைப்பருப்பு பாயசம் செய்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் வீட்டில் உள்ளவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க. வீட்டில் ஏதாவதும் நலக்காரியங்கள் நடைபெற்றால் எப்பொழுதும் சேமியா பாயசம், பால் பாயசம் என்று செய்யாமல் இது போன்று கடலைப்பருப்பு பாயசம் செய்து கொடுங்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

Ingredients:

  • 1 பாக்கட் பாயச சேமியா
  • 1 கப் வெல்லம்
  • 2 ஸ்பூன் நெய்
  • 15 முந்திரி பருப்பு
  • 1 கப் கடலை பருப்பு
  • 2 ஏலக்காய்
  • 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் கடலை பருப்பை குக்கரில் வேக வைத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து ஏலக்காய் மற்றும் சர்க்கரையை மிக்சியில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
  3. பிறகு ஒரு வாணலில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் பாயச சேமியா சேர்த்து வேக விடவும்.
  4. சேமியா வெந்ததும் அதில் நுணுகிய வெல்லத்தை சேர்த்து கிளறவும்.
  5. அடுத்து மற்றொரு வாணலில் நெய் விட்டு முந்திரி பருப்பை சேர்த்து வறுத்து சேமியாவில் சேர்க்கவும்.
  6. அடுத்து அரைத்து வைத்துள்ள சர்க்கரை, ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  7. இப்பொழுது சுவையான கடலைப்பருப்பு பாயசம் தயார்.