உடலில் பல அற்புதங்கள் செய்யும் சுவரொட்டி வறுவல் செய்வது எப்படி ?

Summary: சுவரொட்டியில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளதால் இதை நாம் சமைத்து சாப்பிடும் பொழுது நம் உடலில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து ரத்ததின் அளவும் அதிகரிக்கும். அதுபோல் பெண்கள் கர்ப்பிணி காலங்களில் இதை செய்து சாப்பிடும் பொழுது உங்களுக்கு இருக்கும் உயர் ரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளும் சரியாகிவிடும். இன்று இந்த சுவரொட்டியை எப்படி எளிமையான முறையில் சமைப்பது, தேவையான பொருள்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • ½ KG சுவரொட்டி
  • 2 tbsp எண்ணெய்
  • 3 tbsp குழம்பு மசாலா தூள்
  • 1 tbsp மிளகுத்தூள்
  • 1 tbsp சீரகத்தூள்
  • உப்பு
  • 8 பல் பூண்டு
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • 1 பச்சை மிளகாய்
  • 15 சின்ன வெங்காயம்
  • கருவேப்பிலை
  • 4 tbsp தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 2 பவுள்

Steps:

  1. முதலில் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றிக் கொள்ளவும் எண்ணெயில் மசாலா பொருட்கள் சேர்க்க உள்ளதால் எண்ணெய் அதிகமாக சூடு ஆக வேண்டும்.
  2. பின் எண்ணெய் சூடேற்வதற்காக முன்னதாக நாம் வைத்திருக்கும் குழம்பு மசாலா தூள், மிளகு தூள், சீரகத்தூள் இந்த மூன்று பொருட்களையும் எண்ணெயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  3. அதன்பின் இதனுடன் சிறிய துண்டாக வெட்டி வைத்திருக்கும் சுவரொட்டியையும் இதோடு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பின் சுவரொட்டி வேக ஆரம்பித்தவுடன் அதன் நிறம் மாற ஆரம்பிக்கும்.
  4. பின்பு இந்த பதத்தில் சுவரொட்டி வந்ததும் நாம் வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய். பூண்டு சேர்த்து நான்கு வதக்கவும். பின் இதனுடன் நாம் வைத்திருக்கும் மஞ்சள் தூளையும் சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும்.
  5. அதன் பின் சுவரொட்டியுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி விட்டு ஒரு மூன்று நிமிடங்கள் மிதமான தீயில் அப்படியே விடவும். பின் கடாயில் உள்ள தண்ணீர் நன்றாக வற்றும் வரை கிளறி விட்டுக் கொள்ளுங்கள்.
  6. அதன் பின்பு உங்களுக்கு காரத்தின் தேவைக்கு ஏற்ப மிளகுத்தூளை சேர்த்து சிறிது கருவேப்பிலையும் தூவி விடுங்கள். பின் நன்றாக கிளறி விடுங்கள்.
  7. பின் சுவரொட்டி உள்ள தண்ணீர் முற்றிலும் வற்றியதும் கடாயை இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் சுவையான சுவரொட்டி வறுவல் இனிதே தயாராகி விட்டது. இதை மாதத்திற்கு இரு முறை நீங்கள் செய்து சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் தரும்.