ருசியான வெஜிடபுள் பக்கோடா இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு இதன் சுவையே தனி தான்!

Summary: மாலையில் டீ/காபி குடிக்கும் போது, சூடாகவும், மொறுமொறுப்பாகவும் செய்து சாப்பிடத் தோன்றும். அப்போது பலரும் பஜ்ஜி, போண்டா, பக்கோடா என்று தான் செய்து சாப்பிடுவோம். அதிலும் பக்கோடா என்றால் வெங்காய பக்கோடாவைத் தான் செய்வோம். ஆனால் வீட்டில் உள்ள ஒருசில காய்கறிகளைக் கொண்டும் அற்புதமான சுவையில் பக்கோடா செய்யலாம் என்பது தெரியுமா?இங்கு அப்படி காய்கறிகளைக் கொண்டு எப்படி பக்கோடா செய்வதென்று பார்ப்போம்.

Ingredients:

  • 1 கப் முட்டைக்கோஸ்
  • 1/2 கப் கேரட்
  • 1/2 கப் குடைமிளகாய்
  • 1/2 கப் வெங்காயம்
  • 1 கப் கடலைமாவு
  • 1/2 கப் அரிசி மாவு
  • 1 டீஸ்பூன் மமிளகாய் தூள்
  • 1 உருளைக்கிழங்கு
  • 1 பச்சைமிளகாய்
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • தண்ணீர்
  • எண்ணெய்
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கரண்டி
  • 1 பவுள்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு பௌலில் காய்கறிகள் அனைத்தையும் ஒன்றாக போட்டுக் கொள்ள வேண்டும்.
  2. பின்னர் அதில் கடலை மாவு, மிளகாய் தூள், சோம்பு, மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  3. பின்பு அதில் தண்ணீர் ஊற்றி, பக்கோடா பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
  4. பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
  5. எண்ணெய் சூடானதும், அதில் பிசைந்து வைத்துள்ள பக்கோடா கலவையை எண்ணெயில் தூவி பொன்னிறமாக பொரித்து எடுத்தால், வெஜிடேபிள் பக்கோடா ரெடி!!!