Summary: கோடைகாலங்களில் மற்ற காலங்களை விட தாகம் அதிகம் ஏற்படும். இக்காலங்களில் நீர்சத்து நிறைந்துள்ள தர்பூசணி பழங்களை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுவதோடு, சிறுநீர் பைகளில் மூத்திர அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும். சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும்.இந்த தர்பூசணி மோஜிடோ முற்றிலும் சுவையாக இருக்கும் மற்றும் தாகத்தைத் தணிக்கும். வெயில் காலத்திற்கு ஏற்ற பானம். குளிர்ச்சியான, சுவையான ஜீஸ். இப்பொழுது வாட்டர்மெலன் அதிகமாகக் கிடைப்பதால் இதை செய்து கொடுத்து அசத்தலாம்.