Summary: தினமும் சப்பாத்தி, பூரி செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா? இன்று சற்று வித்தியாசமாக வீட்டில் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் பட்டர் குல்ச்சா செய்து சாப்பிடுங்கள். இதுவரை நீங்கள் பட்டர் குல்ச்சாவை ஹோட்டல்களில் தான் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அந்த பட்டர் குல்ச்சாவை வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம். முக்கியமாக பட்டர் குல்ச்சா செய்வதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது. இந்த பட்டர் குல்ச்சா குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். பேச்சுலர்கள் கூட இதை முயற்சிக்கலாம்.