மதிய உணவுக்கு ஏற்ற பன்னீர் பீர்க்கங்காய் கிரேவி இப்படி செய்து சுடான சாதத்துன் பிசைந்து சாப்பிட்டு பாருங்க!

Summary: குழந்தைகளை காய்கறிகள் சாப்பிட வைப்பதில் நம்மில் பெரும்பாலோர் சிரமப்படுகிறோம். குறிப்பாக பச்சைக் காய்கறிகளான சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில், அவர்கள் எப்போதும் நாட்டம் காட்டுவதே இல்லை. ரொட்டிக்கு பன்னீர் மசாலா அல்லது சாதாரண பருப்பு மட்டுமே சேர்த்து சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் எப்பொழுதும் பன்னீரைப் பயன்படுத்துவது பெரியவர்களுக்குச் சலிப்பை ஏற்படுத்துகிறது, மேலும் குழந்தைகளைக் காய்கறிகளைச் சாப்பிட வைப்பதற்காக, இந்த பனீர் பீர்க்கங்காய் க்ரேவி போன்றவற்றை நாம் செய்ய முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Ingredients:

  • 200 கிராம் பீர்க்கங்காய்
  • 150 கிராம் பன்னீர்
  • 50 கிராம் தக்காளி நறுக்கியது
  • 1/4 கப் நறுக்கிய வெங்காயம்
  • 1 டேபிள் ஸ்பூன் நநெய்
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
  • 1/4 டேபிள் ஸ்பூன் சீரகத்தூள்
  • 1/4 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் கஸ்தூரி மேத்தி
  • உப்பு
  • கொத்தமல்லி இலை
  • 50 மிலி காய்ச்சிய பால்
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காயவைக்கவும்.
  2. எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. பின்பு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தனியா தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.
  4. இதில் தக்காளி சேர்த்து நன்கு மசிய வதக்கவும்.
  5. பிறகு பீர்க்கங்காய் சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும்.
  6. இதில் பனீர் சேர்த்து 2 நிமிடம் வேக வைக்கவும்.
  7. பிறகு அடுப்பை அணைத்து பால் சேர்த்து நன்கு கலந்து விடவும். பிறகு அடுப்பை பற்ற வைத்து கசூரிமேத்தி சேர்த்து மூடி 2 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து வேக வைக்கவும்.
  8. எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
  9. இந்த பனீர் பீர்க்கங்காய் க்ரேவி சப்பாத்தி உடன் சேர்ந்து பரிமாறவும்.