ருசியான ரோட்டுக்கடை தக்காளி சோறு இப்படி செய்து சுட சுட சாப்பிட்டு பாருங்க தட்டு சோறும் காலியாகும்!

Summary: குழந்தைகளுக்கும், வேளைக்கு செல்பவர்களுக்கும் லஞ்சிக்கு என்ன சாதம் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது தக்காளி சாதம் ஒரு முறை இது போன்று செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். இந்த தக்காளி சாதத்துடன் உருளைக்கிழங்கு பொரியல் செய்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். இந்த தக்காளி சாதம் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 2 பட்டை
  • 2 பிரியாணி இலை
  • 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 2 வர மிளகாய்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி தலை
  • மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் கறிமசாலா தூள்
  • 5 தக்காளி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் சாதத்தை உதிரி உதிரியாக வடித்து வைத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, பிரியாணி இலை, கடுகு, கடலை பருப்பு, சோம்பு, வர மிளகாய் சேர்த்து நன்கு பொரிந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  3. வதங்கியதும் மஞ்சள் தூள், கறிமசாலா தூள் சேர்த்து கலந்து பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பிறகு சிறிது நேரம் வேக விடவும். தக்காளி நன்கு வேண்டஹ்த்தும் அதில் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தலை சேர்த்து கலந்துவிடவும்.
  5. அடுத்து வேக வைத்த சாதத்தில் கொட்டி தேவையான அளவு உப்பும் சேர்த்து கிளறி விடவும்.