மாலை நேரங்களில் குடிக்க ருசியான முட்டை சூப் இப்படி செய்து பாருங்க! மீண்டும் மீண்டும் குடிக்க தோன்றும்!

Summary: உங்களுக்கு முட்டை என்றால் ரொம்ப பிடிக்குமா? அது மட்டும் அல்லாமல் குழந்தைகளுக்கு ஸ்கூல் விட்டு வந்தவுடன் என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது முட்டையை வைத்து முட்டை சூப் செய்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. அதுவும் மாலை வேலையில் சுட சுட என்ன சாப்பிடலாம் என்று நினைப்பவர்களுக்கும் இந்த சூப் சூப்பரா இருக்கும்.முட்டை சூப் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 2 முட்டை
  • 1 தக்காளி
  • 1 வெங்காயம்
  • ½ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் கான்ப்ளவர் மாவு
  • கொத்தமல்லி
  • மிளகு தூள்
  • எண்ணெய்

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் முட்டையில் ஒரு பௌலில் உடைத்து ஊற்றி அடித்து வைத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. வெங்காயம், தக்காளி வாதகியாயதும் 2 டம்பளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கான்ப்ளவர் மாவை தண்ணீரில் கரைத்து இதில் ஊற்றவும்.
  4. சூப் பதம் வந்தவுடன் அடித்து வைத்திருக்கும் முடையாய் ஊற்றி சிறிது நேரம் கிண்டி மிளகு தூள், கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.