அடிக்கிற வெயிலுக்கு குளு குளுனு ரோஸ் மில்க் குச்சி ஐஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க!

Summary: கொளுத்தும் வெயில் காலத்தில் செய்தால், அதன் வரவேற்பு தனி தனி தான்.. குழந்தைகளும் குச்சி ஐஸ் பார்த்தாலே ஒரே குஷி ஆகிடுவாங்க. அதுவும் இந்த கொளுத்தும் வெயில் காலத்தில் செய்தால், அதன் வரவேற்பு தனி தனி தான்.. வாங்க அப்படி ஒரு சூப்பரான ரோஸ் மில்க் குச்சி ஐஸ் எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்

Ingredients:

  • 4 கப் பால்
  • 2 கப் சீனி
  • 4 மேசைக்கரண்டி ரோஸ் சிரப்

Equipemnts:

  • 1 குச்சி ஐஸ் மோல்டு
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில்அடிகனமான பாத்திரத்தில் பாலை நன்கு காய்ச்சி ஆற வைக்கவும். பால்ஆறியதும் மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டவும். வடிகட்டிய பாலுடன் சீனி மற்றும் ரோஸ் சிரப் சேர்க்கவும்.
  2. பிறகு கரண்டியால் நன்றாகக் கலந்து கொள்ளவும். குச்சி ஐஸ் மோல்டுகளில் ரோஸ் மில்க் கலவையை கவனமாக ஊற்றவும். மோல்டுகளை மூடி ஃப்ரீஸரில் 12 மணி நேரங்கள் வைத்து உறையவிடவும்.
  3. பிறகுமோல்டுகளை வெளியே எடுத்து ஓடும் நீரில் நனைத்து குச்சியைப் பிடித்து மோல்டுகளிலிருந்து ஐஸைத் தனியாக எடுக்கவும். குளுகுளுகுச்சி ஐஸ் தயார்.