நாவில் எச்சி ஊறும் தேங்காய் பால் பனியாரம் செய்வது எப்படி ?

Summary: பொதுவாக காலை உணவு ராஜா விருந்து என்று கூறுவார்கள். ஏன்னென்றால் இரவு முழுவதும் சாப்பாடு இல்லாமல் இருக்கும் நம் உடலுக்கு காலையில் எவ்வளவு சாப்பிட்டாலும் பிரச்சனை இருக்காது ஆகையால் காலையில் சாப்பாட்டை ராஜ உணவு என்பர். மதிய உணவை வயிறு பசிக்கு ஏற்றார் போல் சாப்பிட வேண்டும் என்பார்கள். இரவு உணவு மட்டும் அளவாக சாப்பிட வேண்டும் இல்லையென்றால் சாப்பாட்டை தவிர்த்து விட்டு வெறும் பழங்கள் சாப்பிட்டால் போதுமானது என்றும் சொல்வார்கள். இப்படி இப்பொழுது எதை சாப்பிட வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லிக்கொண்டு தான் வருகிறார்கள். ஆகையால் இன்று இரவு உணவுக்கு சாப்பிடுவதற்கு தேங்காய் பால் கொண்டு செய்த பணியாரத்தை பற்றி பார்க்கலாம். இதை இரவு தான் சாப்பிட வேண்டும் என்று கிடையாது மழை நேரங்களில் சூடாக சாப்பிட வேண்டும் என்று தோனும் போதும் இதை செய்து சாப்பிடலாம். இன்று தேங்காய் பால் பணியாரம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 1 கப் இட்லி அரிசி
  • 4 tbsp உளுந்தம் பருப்பு
  • 2 tbsp வெந்தயம்
  • 2 tbsp உப்பு
  • ¼ tbsp சமையல் சோடா
  • 1 கப் தேங்காய் பால்
  • 1 tbsp எண்ணெய்
  • 1 tbsp கடுகு
  • 1 பெரிய வெங்காயம்
  • 2  பச்சை மிளகாய்
  • 1 tbsp இஞ்சி
  • 1 கேரட்
  • ¼ கப் கொத்த மல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 பனியாரகல்
  • 1 சினுக்கோலி
  • 1 மிக்ஸி
  • 1 குழம்பு பாத்திரம்

Steps:

  1. முதலில் மாவு தயார் செய்வதற்காக கொடுக்கப்பட்ட பொருட்களை அந்த அளவில் எடுத்து ஒரு பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து சிறிது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைத்து கொள்ளுங்கள்.
  2. பின்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள் பின் எண்ணெய் நன்கு சூடு ஏறியதும் அதில் கடுகை சேர்த்துக் கொள்ளவும் நன்றாக பொரிந்ததும் அதில் பொடி பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் கீரிய பச்சை மிளகாய் வையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. அதன் பின் வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கி கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன். பின் பொடி பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து நன்றாக கிளறி விட்டு வதக்கவும். அதன் பின்பு கடைசியாக கேரட்டையும் பொடி பொடியாக நறுக்கி அதையும் கடாயில் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
  4. கேரட் மற்றும் போட்டுள்ள அனைத்து காய்கறிகளும் நன்றாக வதங்கியதும் கடாயை கீழே இறக்கி வைத்து விடுங்கள். பின்பு நாம் ஊறவைத்த பொருள்களை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  5. பின் இதனுடன் தேவையான அளவு உப்பு, சமையல் சோடா சேர்த்து நான்கு கலக்கி கொள்ளவும். அதன் பின்பு நாம் வைத்திருக்கும் தேங்காய் பாலையும் இதனுடன் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
  6. அதன்பின் கடைசியாக நாம் வைத்துள்ள வதக்கிய காய்கறிகளையும் இதனுடன் சேர்த்து மற்றும் பொடி பொடியாக நறுக்கி கொத்தமல்லியையும் சேர்த்து நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
  7. அதன் பின் பனியார கல்லை அடுப்பில் வைத்து கல் சூடேறி ஏதும் ஒவ்வொரு பனியார குழியிலும் சிறிது நெய் ஊற்றி குழி அளவுக்கு மாவை ஊற்றிக் கொள்ளுங்கள். பின் கீழ்ப்பகுதி வெந்து வந்ததும் சினுகோலியை வைத்து பணியாரத்தை திருப்பி போட்டுக் கொள்ளவும்.
  8. இப்படியே இருபுறமும் பொன்னிறமாக வந்தவுடன் பணியாரத்தை எடுத்துக் கொள்ளவும் இப்படியாக மீதம் இருக்கும் மாவையும் ஊற்றி பணியாரமாக எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான ரூசியான தேங்காய் பால் பணியாரம் இனிதே தயாராகிவிட்டது.