காரசாரமான கடப்பா முட்டை வறுவல் இப்படி செய்து பாருங்க! அப்புறம் நீங்களே அடிக்கடி செய்வீங்க!

Summary: மதியம் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள என்னை செய்வது என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது எலாம் சாதத்துடனும் சேர்த்து சாப்பிட சுவையான கடப்பா முட்டை வறுவல் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க. அப்புறம் மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். எப்படி கடப்பா முட்டை வறுவல் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 20 சின்ன வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • கருவேப்பிலை
  • 4 பல் பூண்டு
  • 2 பீஸ் இஞ்சி
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 2 வர மிளகாய்
  • 2 பட்டை
  • 1 டீஸ்பூன் தனியா
  • எண்ணெய்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு
  • கருவேப்பிலை
  • 4 முட்டை

Equipemnts:

  • தவா

Steps:

  1. முதலில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து முட்டைகளை நன்கு வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
  3. பிறகு ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் மிளகாய் தூள் சேர்த்து அத்துடன் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் கருவேப்பிலை இலைகளை போட்டு பச்சை வாசனை போக வதக்கிக்கொள்ளவும்.
  4. நன்கு வதக்கியதும் வேக வைத்த முட்டைகளை இரண்டாக அறுத்து இதில் சேர்த்து ஒரு புறம் வெந்ததும் மறு புறம் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.