சன்டே ஸ்பெஷல் ருசியான சிக்கன் லாலிபாப் இனி இப்படி செய்து பாருங்க! கிரிஷ்பியாக இருக்கும்!

Summary: நீங்கள் சிக்கன் விரும்ம்பி சாப்பிடுவீர்களா? உங்களுக்கு சிக்கன் லாலிபாப் ரொம்ப பிடிக்குமா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. ஹோட்டல்களில் தரப்படும் சிக்கன் லாலிபாப் அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் வீட்டில் எப்படி அது போன்று செய்வதென்று பலருக்கும் தெரியாது. இனி அந்த கவலை வேண்டாம் நம் வீட்டிலேயே ஹோட்டல் ருசியில் எப்படி மொறு மொறுனு சிக்கன் லாலிபாப் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

Ingredients:

  • 4 சிக்கன்
  • 1 டீஸ்பூன் சோயாசாஸ்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 ஸ்பூன் மிளகு தூள்
  • 2 ஸ்பூன் மைதா மாவு
  • 2 ஸ்பூன் கான்ப்ளவர் மாவு
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு
  • 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1 முட்டை
  • எண்ணெய்

Equipemnts:

  • கடாய்
  • பவுள்

Steps:

  1. முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து அதன் கால் பகுதில் இருக்கும் தோலை கத்தியால் கிழித்து மேலே தள்ளி விடவும். பிறகு அதனை தனியாக எடுத்து வைக்கவும்.
  2. அடுத்து ஒரு பௌலில் சோயாசாஸ், இஞ்சி பூண்டு விழுது, மிளகு தூள், மைதா மாவு, கான்ப்ளவர் மாவு, மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, எலுமிச்சை சாறு, முட்டை ஒன்றை உடைத்து ஊற்றி நன்கு கலந்து விடவும்.
  3. அடுத்து அந்த மசாலில் சிக்கனை போட்டு பிரட்டி ½ மணி நேரம் ஊறவிடவும்.
  4. ஊறியதும் ஒரு வாணலில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி ஊறவைத்த சிக்கனை ஒவொன்றாக எண்ணெயில் போட்டு வேக விட்டு பொரித்து எடுக்கவும்.
  5. இப்பொழுது சுவையான சிக்கன் லாலிபாப் தயார்.