மும்பை மசாலா டீ இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!

Summary: காலையில் எழுந்ததும் பலருக்கும் டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். இல்லை இல்லை என்றால் அந்த நாளே சுறு சுறுப்பாக போகாது. அந்தவகையில் அந்த நாள் முழுவதுமே சுறு சுறுப்பாக இருக்க மும்பை மசாலா டீ இது போன்று ஒரு முறை போட்டு குடித்து பாருங்க சும்மா எனர்ஜிடிக்க இருப்பிங்க.இந்த மசாலா பௌடரை அரைத்து ஸ்டோர் பண்ணி வைத்துக்கொண்டால் தேவைப்படும் பொழுதெல்லாம் பயன்படுத்தலாம்.

Ingredients:

  • 10 கிராம் ஏலக்காய்
  • 15 கிராம்பு
  • 10 பட்டை
  • ½ டீஸ்பூன் ஜாதிக்காய்
  • 1 டேபிள் ஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் மிளகு
  • ரோஸ் இதழ்கள்
  • 50 கிராம் சுக்கு
  • துளசி
  • பால்
  • நாட்டுச்சர்க்கரை
  • 1 ஸ்பூன் டீ தூள்

Equipemnts:

  • 1 டீ பாத்திரம்

Steps:

  1. முதலில் அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள அணைத்து பொருள்களையும் மிதமான தீயில் வறுத்து ஆறியதும் மிக்சியில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு டீ பாத்திரத்தில் தண்ணீரில் டிகாஷன் போட்டு அத்துடன் அறைத்து வைத்துள்ள பொடியை 1 ஸ்பூன் சேர்த்து டிகாஷன் ரெடி ஆனதும் தேவையான அளவு பால் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
  3. பால் நன்கு கொதித்து வந்ததும் ஒருடம்ளரில் தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து டீயை ஊற்றி அருந்துங்கள்.