ருசியான தக்காளி மசாலா இட்லி இப்படி செய்து பாருங்க! அஹா இதன் ருசியே தனி தான்!

Summary: இட்லி போன்ற உணவுகள் நம் உடலில் எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகள் அதனால் நமது ஆரோக்கியமும் மேம்படும். ஏனென்றால் அனைவருக்கும் பிடித்த உணவாக இட்லி இருக்கும் இட்லியை வெறுப்பவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள் இருந்தாலும் ஒரு மாறுதலுக்காக புது விதமாக சுவையான இட்லி செய்து சாப்பிடலாம். ஆம், இன்று தக்காளி மசாலா இட்லி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். காலை மற்றும் இரவு நேரங்களில் இந்த இட்லியை செய்து சாப்பிடலாம் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Ingredients:

  • 1 துண்டு இஞ்சி
  • 3 பல் பூண்டு
  • ½ tsp சோம்பு
  • 2 கப் இட்லி மாவு
  • 2 tbsp எண்ணெய்
  • ½ tsp கடுகு
  • ½ tsp உளுந்தபருப்பு
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • அரைத்த விழுது
  • ½ tsp மஞ்சள் தூள்
  • 2 tsp மிளகாய் தூள்
  • உப்பு
  • இட்லி
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. முதலில் தக்காளி மசாலா இட்லி செய்ய வழக்கம் போல் இட்லி ஊற்றி வேக் வைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். பின் இட்லியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
  2. பின்பு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து கொண்டு அதில் ஒரு துண்டு இஞ்சி, மூன்று பல் பூண்டு மற்றும் அரை டீஸ்பூன் சோம்பு சேர்த்து மையாக அரைத்து கொள்ளுங்கள்.
  3. அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பின் எண்ணெய் காய்ந்ததும் அரை டீஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பு சேர்க்கவும்
  4. பின் கடுகு பொரிந்து வந்தவுடன் இதில் பொடியாக நறுக்கிய வைக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதக்கி வந்தவுடன்.
  5. பின் நாம் நறுக்கி வைத்திற்கும் தக்காளியை சேர்த்து வதக்கவும். பின் தக்காளி நன்கு வெந்து மசிந்து வந்ததும் நாம் அரைத்து வைத்திருக்கும் விழுது மற்றும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
  6. பின் மசால வாசனை போன உடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் இட்லி மற்றும் சிறிது கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி விட்டு வதக்கவும். அவ்வளவு தான் சுவையான தக்காளி மசாலா இட்லி தயார்.