கேரளா நேத்திரபழம் அப்பம் இப்பிடி செய்து பாருங்க! இதன் சுவையே தனி தான்!

Summary: சில பேருக்கு அப்பம் செய்தால் சரியான பக்குவத்தில் வராது. அப்பமானது கல்லு போல் ஆகிவிடும். அப்படியில்லையென்றால் எண்ணெயில் பிரிந்து போய் விடும். இந்த இரண்டு பிரச்சனையும் வராமல் சுலபமான முறையில் அவ்வளவு மிருதுவாக, ஒரு நேந்திரம் பழம் அப்பம் எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குழந்தைகளுக்கு இந்த ஸ்வீட் ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும், நாவிற்கு சுவையாக இருக்கும்.

Ingredients:

  • 1 நேந்திரம் பழம்
  • எண்ணெய்
  • 1 கப் மைதா
  • 1 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு
  • 1/2 கப் 3 டேபிள்ஸ்பூன்
  • 2 ஏலக்காய்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 கடாய்

Steps:

  1. முதலில்நேந்திரம் பழத்தை நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
  2. பின்னர்ஒரு பௌலில் மாவிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக கலந்துக் கொள்ள வேண்டும்.
  3. பின்ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
  4. எண்ணெய்சூடானதும், வாழைப்பழ துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், நேந்திரம் பழம் அப்பம் ரெடி!!!