மாலை நேரத்திற்கு சுடாக பருக காளான் சூப் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

Summary: மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவுதான் இது. சட்டுனு காளான் சூப் ஒரு முறை இப்படி செய்து கொடுத்து பாருங்க இனி ரெஸ்டாரண்ட்களில் சூப் சாப்பிட மாட்டார்கள். உங்களீடமே எப்பொழுது மீண்டும் காளான் சூப் செய்து தருவிகனு கேட்டு தொல்லை பண்ணுவாங்க. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். ஹோட்டல்களில் தரப்படும் அதே சுவையில் இருக்கக்கூடும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.இந்த காளான் சூப் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 1 கப் காளான்
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • 2 பீஸ் இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 கொடைமிளகாய்
  • 1 டீஸ்பூன் கறிமசாலா
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் சீரக பொடி
  • உப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் கான்ப்ளவர் மாவு
  • மிளகு பொடி

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் காளானை நன்கு கழுவி சுத்தம் செய்து நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. வதங்கியதும் நறுக்கிய வெங்காயம், தக்காளி கொடைமிளகாய், சேர்த்து அத்துடன் நறுக்கிய காளானை சேர்த்து கிளறவும்.
  4. அடுத்து அதில் கறிமசாலா, மிளகாய் பொடி, சீரக பொடி, தேவையான அளவு உப்பு, மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
  5. காளான் வெந்ததும் அதில் கான்ப்ளவர் மாவில் தண்ணீர் ஊற்றி கலந்து காளானில் சேர்க்கவும்.
  6. கொஞ்சம் நேரம் கொதித்ததும் சூப் பதம் வந்துவிடும் பிறகு தேவையான அளவு மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.