ஆந்திரா நெல்லிக்காய் ரசம் இப்படி செய்து சுட சட சோறுடன் ஊற்றி சாப்பிட்டு பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: ஆந்திராவில் செய்யப்படும் அணைத்து உணவுகளுமே தனி சுவைத்தான். அதுமட்டும் அல்லாமல் கார சரமாகவும் இருக்கும். அந்த வகையில் ஆந்திரா நெல்லி ரசம் இது போன்று செய்து சுட சுட சாதத்துடன் ஊற்றி சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும். அதுமட்டும் அல்லாமல் உடலுக்கும் இதமாக இருக்கும். இந்த ரசம் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 5 நெல்லிக்காய்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 தக்காளி
  • எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 2 வர மிளகாய்
  • கருவேப்பிலை
  • பெருங்காயம் பொடி
  • 5 சின்ன வெங்காயம்
  • இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்
  • மஞ்சள் பொடி
  • உப்பு
  • 3 ஸ்பூன் துவரம் பருப்பு
  • கொத்தமல்லி தலை

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வர மிளகாய், பெருங்காயப்பொடி, கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், இடித்த சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும்.
  3. அடுத்து அதில் அரைத்துவைத்துள்ள விழுதை சேர்த்து சிறிதுநேரம் வதக்கவும்.
  4. அடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  5. ஒரு கொதி வந்ததும் வேக வைத்த துவரம் பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.
  6. கடைசியாக கொத்தமல்லி தலைகளை தூவி இறக்கவும்.