ருசியான சைவ கறி குழம்பு இப்படி செய்து பாருங்க! கறி குழம்பு சுவை மிஞ்சி விடும்!

Summary: நீங்கள் சைவ பிரியர்களை அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. நீங்களும் இனி கறி குழம்பு சாப்பிடலாம். ஆம் இது போன்று சைவ கறி குழம்பு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். அதுமட்டும் அல்லாமல் இந்த குழம்பை சாதம், சப்பாத்தி, பூரி போன்றவற்றுடனும் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இந்த குழம்பை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Ingredients:

  • 2 வெங்காயம்
  • 2 தக்காளி
  • கருவேப்பிலை
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1 காலிப்ளவர்
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் கறிமசாலா பொடி
  • 1 ஸ்பூன் கரம் மசாலா
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு

Equipemnts:

  • கடாய்

Steps:

  1. முதலில் காலிபிளவரை நறுக்கி சுடுதண்ணீரில் சிறிது நேரம் போட்டு எடுத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி தக்காளி, இஞ்சி பூண்டு விழுது கருவேப்பிலை, சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. வெங்காயம் தக்காளி வதங்கியதும் சுத்தம் செய்து வைத்துள்ள காலிபிளவரை சேர்த்து அத்துடன் கறிமசாலா, கரம் மசாலா, மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்கவிடவும்.
  4. கொதித்ததும் அடுப்பை நிறுத்தவும்.