இட்லி, தோசைக்கு ருசியான மணத்தக்காளி கீரை சட்னி இப்படி செய்து  பாருங்க! 2 இட்லி அதிகமாகவே சாப்பிடுவாங்க!

Summary: சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில் பயன் படுத்தலாம். வெய்யிலால் வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு. எப்போதும் போல் கூட்டு பொரியல் என்று இல்லாமல் ,இந்த மணத்தக்காளிக் சட்னி செய்து பாருங்க. மணத்தக்காளி கீரை சட்னி அதித மருத்துவ குணம் கொண்டது.. இருப்பினும் சுவையில் ஒன்றும் குறைந்ததில்லை. சுவையும் மனமும் கொண்ட சட்னி செய்து சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட்டால், அதன் ருசியே தனி. வீட்டில் அனைவரும் உங்களை புகழ்ந்து விடுவார்கள் .

Ingredients:

  • 1 கட்டு மணத்தக்காளிக் கீரை
  • 4 பூண்டுப் பல்
  • 2 மிளகாய் வற்றல்
  • 6 சின்ன வெங்காயம்
  • உப்பு, எண்ணெய்
  • கப் தேங்காய்த் துருவல்
  • புளி

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. கீரையைசுத்தம் செய்து ஒவ்வொரு இலையாக ஆய்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு தண்ணீர் விட்டு நிறம் மாறாது அவித்துக் கொள்ள வேண்டும்.
  2. கடாயில்மிளகாய் வற்றல், பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  3. அதனுடன்புளி, உப்பு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை சேர்க்கவும். எல்லாப் பொருட்களையும் மிக்ஸி ஜாரில் கொட்டி அரைத்து எடுக்க வேண்டும். மணத்தக்காளிக் கீரை சட்னி ரெடி.