காரசாரமான மத்தி மீன் மிளகு கறி செய்து, சுட சுட சாதம் கூட இதை போட்டு சாப்ட்டு பாருங்க சுவை அபாரமா இருக்கும்!

Summary: மீன் வைத்து குழம்பு, வறுவல், தொக்கு என பல வகைகளில் சமைத்திருக்கிறோம். ஒருமுறை மத்தி மிளகு கறி இப்படி வச்சு பாருங்க,சுவை அட்டகாசமாக இருக்கும்ஆனால் மீன் சமையல்  மட்டும் ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனி சுவையில் இருக்கும். ஒருவர் சமைக்கும் விதத்தை பொறுத்து அதன் சுவையும் மாறுபடும். அப்படி ஒருவித தனி சுவையில் இருக்கும் மத்தி மிளகு கறி  எப்படி செய்வது என்பதைப் பற்றியே இங்கு தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.

Ingredients:

  • அரை கிலோ மத்தி மீன்
  • அரை கப் தேங்காய் துருவல்
  • 1 சிட்டிகை மஞ் கள் தூள்
  • 2 தேக்கரண்டி மிளகு
  • 1 தேக்கரண்டி கடுகு
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1/4 தேக்கரண்டி வெந்தயம்
  • 5 பல் பூண்டு
  • 1 பச்சை மிளகாய்
  • 2 ஈர்க்கு கறிவேப்பிலை
  • உப்பு
  • 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. மிளகு,கடுகு, வெந்தயம், சீரகம் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும், தேங்காய், மஞ் கள் தூள் கறிவேப்பிலையை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, பூண்டு பச்சை மிளகாய் தாளிக்கவும்.
  3. அதில்அரைத்த விழுது, பொடி உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின் சுத்தம் செய்த மீன்களை சேர்த்து பிரட்டி மூடி மிதமான தீயில் 10 நிமிடம் வேக விடவும். சுலையான மத்தி மிளகு கறி தயார்.