ஜப்பனீஸ் ஸ்டைல்ஸ் நூடுல்ஸ் சூப் எப்படி தாயார் செய்வது ?

Summary: கடைகளில் விற்கப்படும் நூடுல்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி சமைக்காமல் ஜப்பனீஸ் ஸ்டைலில் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி சுவையாகவும் ருசியாகவும் நூடுல்ஸ் செய்யலாம். இப்படி ஒரு முறை நீங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் போதும் உங்கள் வீட்டில் உள்ள சிறுவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்து போக அடிக்கடி உங்களை செய்து தரச் சொல்லி கேட்பார்கள். அந்த அளவிற்கு சுவையான ருசியான ஜாப்பனீஸ் ஸ்டைல்ஸ் நூடுல்ஸ் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.

Ingredients:

  • 150 கிராம் நூடுல்ஸ்
  • 2 tbsp எண்ணெய்
  • 2 tbsp பூண்டு
  • 1 tbsp இஞ்சி
  • 1  கேரட்
  • ½ குடை மிளகாய்
  • ¼ tbsp மஞ்சள்த்தூள்
  • ½ tbsp சீரகத் தூள்
  • ½ tbsp கரம் மசாலா
  • 1 tbsp மல்லித்தூள்
  • 1 tbsp மிளகாய்த் தூள்
  • 6 கப் தண்ணீர்
  • 2 tbsp சோள மாவு
  • 1 tbsp எலுமிச்சை சாறு
  • கொத்த மல்லி
  • மிளகுத்தூள்

Equipemnts:

  • 1 கடாய்
  • 2 பவுள்

Steps:

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் பின் பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  2. அதன் பின்பு வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி பின் கடாயில் போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.
  3. அதன் பின்பு கேரட் மற்றும் பீன்ஸ் காய்கறியை மிகவும் பொடி பொடியாக நறுக்கி கடாயில் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பின் குடை மிளகாய் சிறிதாக நறுக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  4. அனைத்து காய்கறிகளையும் நன்றாக கிளறி விட்டு வதக்கிக் கொள்ளவும். காய்கறிகள் நன்றாக வதங்கியதும் கீரிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சீரகத்தூள், கரம் மசாலா, மல்லித்தூள், மிளகாய் தூள் மற்றும் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  5. அதன்பின் ஆறு கப் தண்ணீர் ஊற்றி கடாயை மூடிவிட்டு நன்கு கொதிக்க விடுங்கள். சூப் நன்றாக கொதித்து வந்ததும் ஒரு சிறிய பவுளில் சோள மாவு எடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கி கொள்ளுங்கள்.
  6. பின்பு சூப் நன்றாக கொதித்ததும் நாம் எடுத்து வைத்துள்ள நூடுல்ஸ் சேர்த்து நன்றாக கிளறி விட்டு அதன் பின்பு நாம் கலைத்து வைத்துள்ள சோளமாவையும் சேர்த்தது கொள்ளவும்.
  7. பின்பு ஒரு நிமிடம் நன்கு கொதிக்க விட்டு எலுமிச்சை சாறு, கொத்தமல்லி, மற்றும் தேவையான அளவு மிளகுத்தூள் சேர்த்து இறக்கிக் கொள்ளவும்.அவ்வளவுதான் சுவையான நூடுல்ஸ் சூப் இனிதே தயாராகிவிட்டது.