Recipes

Recipe Image
வீட்டிலேயே சுவையான இறால் கிரேவி செய்யலாம் வாருங்கள்….

பெரும்பாலான வீடுகளில் சிக்கன், மட்டன், மீன் இது போன்ற உணவுகளை தவிர வேறு அசைவ உணவுகள் பொதுவாக சமைக்க மாட்டார்கள். ஏனென்றால் அதை ருசியாக சமைக்க முடியுமா என்பதை அவர்களுக்கான சவாலாக இருக்கும். ஆகையாலே பலரது வீட்டில் இறால், நண்டு இது போன்ற கடல் உணவுகள் ஹோட்டல் சென்றால் மட்டும் ஆர்டர் செய்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். ஆனால் நாம் இன்று சுவையான இறால் கிரேவி வீட்டிலேயே எப்படி சுவையாக சமைப்பது என்று இந்த சமையல் தொகுப்பில் காணலாம். மேலும் இறாலை சுத்தம் செய்யும் முறை, இறால் கிரேவிக்கு தேவையான பொருட்கள், அதற்கான செய்முறைகள் என அனைத்தையும் இதில் காணலாம்.

Recipe Image
மணத்தக்காளி புளிகுழம்பு செய்வது எப்படி ? இளம் தாய்மார்களுக்கு முக்கியமாக செய்து கொடுங்கள்……

தினசரி வீட்டில் செய்யும் கத்திரிக்காய் புளிக்குழம்பு, வெண்டைக்காய் புளிக்குழம்பு, முருங்கக்காய் புளிக்குழம்பு, வெங்காய குழம்பு இந்த நான்கு புளிகுழம்பு தான் மாறி மாறி வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கிறோம். சற்று வித்தியாசமாக மணத்தக்காளி பூண்டு குழம்பு இதை ஒருநாள் வீட்டில் சமைத்து சாப்பிட்டு பாருங்க அனைவருக்கும் பிடித்த ஒரு குழம்பாக இருக்கும். இதில் ஒரு முக்கியத்துவம் என்னவென்றால் இதில் ஒரு மருத்துவ குணம் உள்ளது புதியதாக பிரசவித்த பெண்கள் இந்த குழம்பு செய்து சாப்பிடுவதன் மூலமாக தாய்ப்பால் சுரப்பது அதிகமாக சுரக்கும். இதை முன்பே பிரசவித்த பெண்களுக்கு நம் முன்னோர்கள் அடிக்கடி வீட்டில் செய்து கொடுக்கும் ஒரு உணவாகும். இதை எப்படி செய்வது தேவையான, பொருட்கள், மற்றும் செய்முறைள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் காணலாம்.

Recipe Image
வெஜ் குருமா | Veg Kurma

பொதுவாக நம் வீடுகளில் இட்லி தோசை சப்பாத்தி போன்ற உணவுகளுக்கு சாம்பார் மற்றும் எதாவது ஓரு சட்னி வைத்து தான் சாப்பிட்டு வருகிறோம். மேலும் புரோட்டா சாப்பிட வேண்டுமானாலும் சால்னா வைக்க வேண்டும். இதற்காகவே நாம் வெளியே சென்று தான் சாப்பிட்டு வருகிறோம் இதற்கு இன்று ஒரு முடிவு கட்டிவிடலாம் ஆம் இன்று சுவையான வெஜ் குருமா செய்யப் போகிறோம் வீடுகளில் விரோதங்கள் மேற்கொள்ளும் பொழுது புரோட்டாவுக்கு அசைவ சால்னா சாப்பிடாமல் இருப்பார்கள் ஆனால் அதற்கு பதிலாக அதைவிட சுவையான வெஜ் குருமா எப்படி செய்வது, தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை என அனைத்தையும் இன்றைய சமையல் தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipe Image
இஞ்சி சட்னி | Ginger Chutney

நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, ஒரு சட்னி, மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த இஞ்சி சட்னியை செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும். இந்த இஞ்சி சட்னியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.